Monday, December 31, 2018

எனது வாழ்வு எனது பார்வை 2018

கட்டி முடிக்கபடாத
வீடு
எப்பொழுது முடியுமென்று
என்ற கேள்வி
நிறைய
சொந்த பிரச்சகைனகள்
சில
நல்ல நிகழ்வுகள்
புதிததாய்
கற்றது ஒன்றுமில்லை
இருப்பதை வைத்து
ஓட்டிய வாழ்வு
காலை மாலை
இரவுகள்
வந்து போயின
அது இதுவென்ற
ஏக்கங்கள் எல்லாம்
ஏக்கங்களாய்
தொடர்கதை
நிகழ்வுகள்
நடந்து கொண்டிருக்க
வாழ்வும்
வருடங்கள் தோறும்
நகர்கிறது
பொருள்
வரும்வழி  ஒன்றாய்
பேகும்வழி
பல..
இலையுதிர் காலமொன்றால்
வசந்தகாலம் வருமென்று
தொிய..
கோடையும்
கோடைக்கு பின்பும்
மழையும்  இயல்பாய்
வரலாற்று பயன்படாய்
வருடங்கள்
வருகிறது போகிறது
ஆனால் வாழ்வு...??!!!

Monday, December 17, 2018

சீத்துவாலை

சீத்துவாலை

அடர்ந்த பனி காலை கண்விழித்தல்  என்பது கொஞ்சம் கடினம் தான்.

மனது சொல்லியவுடன் எழுந்துவிட்டால் பிரச்சனை இல்லை.  அவ்வாறு செய்யாவிடில் அன்று காலை எல்லாவேலைகளையும் முடித்து  அவசரகதியில் வேலைக்கு செல்ல வேண்டும்.

முதல் நாள் அசைவ விருந்தொன்று  மனைவி சாப்பிடததால் ...

ஏங்க...இன்னிக்கு என்ன வாங்கி தா்றீங்ங்க..

கேள்வி கணைகளுடன் மனைவியின் முகம் பார்த்தேன். என்ன வேணும்?

ஏதாவது வாங்கி கொடுங்க...

சரி...

விளையாட்டு மைதானம் சென்று உடற்பயிற்சிகள் முடித்து எனது இருசக்கர வாகனம்  எங்கள் ஊர்  மீன்மாா்கெட் நோக்கி பயணிக்க..

தெரிந்த முகங்களின்  வணக்க புன்னகைகளை வாங்கி பதில் புன்னகையில் பயணம் தொடர்ந்து...

பயணம் மீன் மார்கெட் சென்றடைய  மீன் மார்கெட்டில் தொிந்த வியாபாரிகளின் புன்னகைக்கு பதில் புன்னகை செய்து.

நாட்டு மீன் தேடினேன்.

டிசம்பா்  மாதங்களில் கிடைக்கும்  கெழுத்தி, சிலேப்பி,சாரு பொடி(சின்ன கொண்டைமீன்) குறவை,ஆரா,விறா துரும்பு இந்த மீன்வகைகளில் என் தேடல் கெழுத்தி மீனாய் இருக்க...

கண்களின் தேடல் கெழுத்தி...

தேடலின் முடிவில்  கெழுத்தி மீன் ஒரு கடையில் தென்பட ..

கூடவே இன்னொரு மீன்வகை இடம் பெற்றிருக்க...

தம்பி சீத்துவால வாங்கிட்டு போங்க சூப்பார இருக்கும் என்றார் வியாபாரி..

எவ்வளோ கிலோ....


200 தம்பி... என்று நெகிழி பையில் எடுத்து போட ஆரம்பித்தார்.

பத்து மீன்கள் ஒரு கிலோ...

பணம் கொடுத்து மீன் வாங்கி பத்திரப்படுத்தி...

அண்ணா மீன் நல்லாயிருக்கும்ல..?!

நல்லாருக்கும்...போ தம்பி...

வண்டி எடுத்தேன்..

அண்ணா என்ன பேரு சொன்னீங்க..

சீத்துவாலை என்றார் புன்னகையுடன்..

சீத்துவாலையுடன் நான் பயணித்தேன்.

எப்படி இருக்குமோ என்ற  ஐயப்பாட்டுடன் என் வீடு நோக்கிய பயணம் தொடர்ந்து.



Thursday, December 13, 2018

சாம்சங் நோட் 2 -வில் சுட்டவை

சூாியன் மறைவு எப்பொழுதுமே ரம்மியமானது.

என்னுடைய மாலைநேர பயணங்களில் எனக்கு பிடித்த சூரியன் மறைவு காட்சிகள் உங்களின் பார்வைக்கு...













LinkWithin

Related Posts with Thumbnails